மன அழுத்தத்தால் காவலர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

மன அழுத்தத்தால் காவலர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்.!


police-officer-conducted-suicide

காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (வயது 44). இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் தனது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் வேறு யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறிது நாட்களாக காவலர் பணிக்கும் செல்லாமல் இருந்து வந்த நிலையில், குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்ற போது, ' தற்கொலை செய்து கொண்டால் என்ன?' என்று ஒரு விபரீத எண்ணம் எழுந்துள்ளது. எனவே, சோழதேவனஹள்ளி அருகாமையில் உள்ள யசுருகட்டா பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

bangalore

இதனை தொடர்ந்து மரத்தில் யாரோ தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் கொடிகேஹள்ளி காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? ஏன்? என்று பல கோணங்களிலும் சோழதேவனஹள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.