பதவியேற்க தயாராகும் பிரதமர் மோடி; அடுத்தடுத்து நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்.!



PM Narendra Modi 3rd time make Governance as Central 

 

2024 மக்களவை தேர்தலில் அமோக வெற்றிபெற்று, மீண்டும் பாஜக தலைமையிலான கட்சி மத்தியில் ஆட்சியை அமைக்கிறது. 1962 ம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 3 வது முறையாக அமையும் ஆட்சி என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியும் 240 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில், கூட்டணிக்கட்சியின் ஆதரவு கடிதத்துடன் இன்று குடியரசு தலைவரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற நிலைக்குழு உதவியுடன் எம்.பிக்கள் வாயிலாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நபராக ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். 

இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பிரதமருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த வயோதிக பெண்மணி.!

கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் மற்றும் அதிபர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Prime minister

அதேசமயம் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கும் மோடி, 50 மதத்தின் தலைவர்கள், உத்திரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டவர்கள் உட்பட பலருக்கும் சிறப்பு அழைப்பையும் விடுத்து இருக்கிறார். பதவியேற்புக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டம் முடிந்ததும் அடுத்தடுத்து ஆட்சியை அமைக்க உரிமை கோர பிரதமர் ஆயத்தமாகுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு?..!