இந்தியா

பிரதமர் மோடி செய்யும் தடாசன யோகா; வைரலாகும் வீடியோ.!

Summary:

p.m narendira modi - tadasana yoga - vairal video

முதன்முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அனுதினமும் யோகா செய்யும் பழக்கமுடைய பிரதமர் மோடி அதனால் விளையும் நன்மைகள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தார். மேலும் யோகா குறித்த பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் பதவி ஏற்றுள்ளதால் இவ்வாண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிகிறது. 

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான யோகாசனம் செய்து, அது குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார். இன்று அனிமேஷன் மூலம் தடாசன யோகா செய்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement