டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
மீண்டும் " Work From Home" வேலை... நேரம் மிச்சம், பெண்களுக்கு அதிக வாய்ப்பு! பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு! "எங்க மேனேஜர் கிட்ட நீங்களே சொல்லிடுங்க" கதறும் நெட்டிசன்கள்..!!!
இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, ‘வீட்டிலிருந்தே வேலை’ செய்யும் முறையை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு கார்ப்பரேட் ஊழியர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மீம்களும் இணையத்தில் குவிந்து வருகின்றன.
‘Work From Home’ குறித்து மோடி வலியுறுத்தல்
மாநாட்டில் பேசிய பிரதமர், எதிர்கால பணிச்சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக, Work From Home முறை போக்குவரத்து நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பில் பங்கேற்கவும் உதவும் என்றார்.
மேலும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து பணிமுறைகளும் மாற்றமடைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்
பிரதமரின் இந்தக் கருத்து வெளியான சில நிமிடங்களிலேயே எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்கள் பரவத் தொடங்கின. அலுவலகத்திற்கு தினமும் வரச் சொல்லும் மேலாளர்களை டேக் செய்து, “பிரதமரே சொல்லிவிட்டார், இப்போதாவது அனுமதியுங்கள்” என ஊழியர்கள் கிண்டலாக பதிவிட்டனர்.
குறிப்பாக “என் மேலாளரிடம் பேசுங்கள்” என்ற வாசகம் பல பதிவுகளில் டிரெண்டாக மாறியது. சிலர் தங்களின் பழைய Work From Home அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
பணி - வாழ்க்கை சமநிலை மீண்டும் பேசுபொருள்
மீம்களைத் தாண்டி, இந்த விவாதம் தற்போது பணி-வாழ்க்கை சமநிலை குறித்த பெரிய கலந்துரையாடலாகவும் மாறியுள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்வதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடிகிறது, பயண சோர்வு குறைகிறது என பல ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலக பணிமுறைக்கு திரும்ப முயற்சித்து வரும் சூழலில், பிரதமரின் இந்த கருத்து நிறுவன கொள்கைகளில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர்..! வெளியான தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்! சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்....!!!