அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் விலை உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் விலை உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!


petrol price increased for america blast


இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் அது சாமான்ய மனிதனை எப்படி பாதிக்குமா? எரிபொருள் விலை எவ்வளவு உயருமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருந்துவந்தது.

ஈரான் நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதியை இறந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் எனவும் கூறப்பட்டது.

petrol

ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய எவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதி இறந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 4.4% உயர்ந்து  69.16 டாலராக உள்ளது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.