தமிழகம்

இது எங்கே போயிட்டு முடிய போகுதோ.! அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை.! வேதனையில் வாகன ஓட்டிகள்.!

Summary:

சென்னையில் பெட்ரோல் விலை 89.70 ரூபாய்க்கும், டீசல் விலை 82.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 89.70 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 82.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement