இந்தியா

இந்தியாவில் 14ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

Summary:

People affected by coronovirus in india

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளிலும் பரவி கோரதாண்டவமாடி வருகிறது. இந்த கொடூர வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 22 லட்சத்து 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இன்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி  இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 பேர் மரணம் அடைந்து கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1992 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் அவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 3323 பேர் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் டெல்லியில் 1707 பேர், தமிழகத்தில் 1323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 


Advertisement