மரணித்த பத்திரிகையாளர் வினோத் துவா இவ்வுளவு கொடூரமானவரா? பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பரபரப்பு பதிவு.!

மரணித்த பத்திரிகையாளர் வினோத் துவா இவ்வுளவு கொடூரமானவரா? பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பரபரப்பு பதிவு.!


passed-away-senior-journalist-vinoth-dua-me-too-issue-g

பாலியல் குற்றச்சாட்டான மீ டூவில் சிக்கி, கொரோனாவில் இருந்து குணமடைந்து உயிரிழந்துள்ள பத்திரிகையாளர் வினோத் துபாவினால், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.

என்.டி.டி.வி, தூர்தர்சன், தி வயர் பத்திரிகையில் பணியாற்றிய இந்திய அளவிலான பிரபல பத்திரிகையாளர் வினோத் துவா (Vinoth Dua). இவர் மீ டூ தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் சிக்கியது பலருக்கும் பெரும் அதிர்வலையை தந்தது. ஆனால், அவரின் மீது நம்பிக்கை உள்ள பலரும், வினோத் துவா நல்லவர் என்றும் அவருக்கு ஆதராக பேசி வருகின்றனர். 

கடந்த வருடத்தில் வினோத் துவா மற்றும் அவரது மனைவி சின்னா துவா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சின்னா துவா மட்டும் கொரோனாவுக்கு பலியாகினர். வினோத் துவா கொரோனாவில் இருந்து மீண்டாலும், வயது மூப்பு உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு இருந்தார். 

Vinoth Dua

இந்நிலையில், இன்று அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்துள்ளதை, அவரது மகள் மல்லிகா துவா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வினோத் துவாவின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், வினோத் துவாவின் மகள் மல்லிகா துவாவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்களின் மதிப்பிற்குரிய தந்தையை நாங்கள் இழந்துவிட்டோம். டெல்லியில் கஷ்டப்படும் இடத்தில் இருந்து, இன்று 42 வருடமாக அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பத்திரிகையாளராக எனது தந்தை உயர்ந்துள்ளார். அவர் எங்களின் தாய், அவரின் மனைவியுடன் இனி சேர்ந்துவிடுவார்" என்று தெரிவித்து இருந்தார். 

Vinoth Dua

இந்நிலையில், வினோத் துபாவினால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்மணி, முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் வைரலாகி வருகிறது. உயிரிழந்த வினோத் துபா பத்திரிகையாளர் என்பதால், விவகாரம் பொதுமக்கள் கையில் எடுக்கப்பட்டு பரபரப்பாக்கப்பட்டுள்ளது. 

பெண்மணியின் பதிவில், "கடந்த 1989 ஆம் வருடம் ஜூன் மாதம் அந்நிகழ்வு நடந்தது. அன்றைய தினம் எனக்கு பிறந்தநாள். எனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எனது குடுமப்த்தினர் மற்றும் நண்பர்கள் தேவையான ஏற்படுகளை விறுவிறுப்புடன் செய்து வந்தனர். நான் சமீபத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு படித்து முடித்து இருந்ததால், வேலைவாய்ப்புகளையும் தேடிக்கொண்டு இருந்தேன். பிறந்தநாள் அன்றே வேலைவாய்ப்பு நேர்காணல் அழைப்பும் வந்தது.

Vinoth Dua

அன்றைய காலத்தில் ஜவானி தொடர் பிரபலமாக ஓடிக்கொண்டு இருந்த நேரத்தில், அரசியல் ரீதியாக நிகழ்ச்சியை கொண்டு செல்ல ஊடக நிறுவனம் ஆட்களை எடுத்து. எனது பிறந்தநாள் அன்று நேர்காணல் அழைப்பு வந்ததால், அதனை தவிர்த்துவிடக்கூடாது என நேர்காணலுக்கு சென்றேன். நான் எனக்கு மிகவும் பிடித்த சேலையை கட்டிக்கொண்டு நேர்காணலுக்கு சென்றிருந்தேன். 

எதிரில் நேர்காணலை நடத்தும் அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நேரடியாக அல்லாமல் மறைமுகமாக என்னை நோக்கி பாலியல் ரீதியான கேள்வியை எழுப்பிய அதிகாரி, நமட்டு சிரிப்புடன் புன்னகைத்தார். எனக்கு முதலில் ஒன்றும் புரியாமல் திகைக்க, பின்னர் ஆத்திரத்துடன் எனது பார்வை இருந்ததால், அந்த தலைப்பை மாற்றிவிட்டு, பின்னர் அமைதியாக சம்பளம் குறித்து கேட்டார். 

Vinoth Dua

நான் அப்போதுதான் படிப்பை முடித்திருந்தேன் என்பதால், ரூ.5 ஆயிரம் ஊதியமாக கேட்டேன். அவர் என்னை பார்த்து "Tumhari aukat kya hai? (உங்கள் நிலை / தகுதி / வாய்ப்பு என்ன?)" என்று கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் சிறுவயதாக இருந்த நேரங்களில் எனக்கு பாலியல் தொல்லை ரீதியான அனுபவம் இருந்தாலும், இங்கு புது விதமான பாலியல் தொல்லை என்னை மனமுடைய வைத்தது. எதுவும் பேசாமல் எழுந்து வந்தேன். 

வீட்டிற்கு கண்ணீருடன் சென்ற நிலையில், எனது தம்பி மற்றும் நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்து வருத்தப்பட்டேன். பின்னர், எனக்கு மற்றொரு செய்தி நிறுவனத்தில் வீடியோ எடிட்டிங் பணிக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் புதிதாக பணியை தொடங்கிய இடத்தில் உள்ள, அந்த அதிகாரியின் நண்பர்கள் மூலமாக என்னை கண்காணித்து வந்தார். நான் பணிக்கு வந்து செல்லும் நேரம் குறித்தும் விசாரித்தார்.

Vinoth Dua

பின்னர், ஒருநாள் இரவு நேரத்தில் பணியை முடித்துவிட்டு வரும் போது, கார் பார்க்கிங்கில் அந்த அதிகாரி காருடன் இருந்தார். என்னை பார்த்து காருக்குள் வரச்சொல்லி, அன்று நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். அவரின் முகத்தில் முழுமையாக நாடகமாடுகிறார் என்ற பிரதிபலிப்பு இருந்தது. அவரிடம் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன். 

அதனைத்தொடர்ந்து, சில நாட்கள் நான் பணியை முடித்துவிட்டு செல்லும் நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து காரில் செல்லலாம் என அழைப்பார். நான் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிடவே, சில வாரங்கள் கழித்து அலுவலகத்திற்கு வருவதை அவர் நிறுத்திவிட்டார். அவர் தான் வினோத் துவா. அவர் தனது மகளிடம் இப்படி நடந்துகொள்வாரா? என்ற ஐயப்பாடும் எனக்கு இருந்தது. 

Vinoth Dua

என்னை போல பிற பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுக்கூடாது. இன்று வினோத் துவா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரம், வன்முறைகள் குறித்து ஆதங்கத்தை தெரிவிக்கிறார். அதனை அவர் வாழ்வியலில் செய்திருக்க வேண்டும். ஆனால், அவரின் வாழ்வியலில் அவர் அதனை செய்யவில்லை. என்னை மன்னித்துவிடு மல்லிகா துவா. உங்களின் தந்தையால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கு வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.