இந்தியா

கொரோனா! பிறந்த குழந்தைக்கு இப்படியொரு பெயரா? காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க!

Summary:

Parents named corono to girl baby

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் பரவிய இந்த வைரசால் 490 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகளே பெரும் பீதியில் உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன் பெண் குழந்தைக்கு கொரோனா என பெயரிட்டார். 

இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு உயிரைக் கொல்லும் வைரஸின் பெயரையா வைப்பது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் திரிபாதி, கொரோனா வைரஸ் ஆபத்தானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் மக்கள் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், உலக மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும்  முக்கியக் காரணமாக உள்ளது.

இந்த குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக,  தீமையை எதிர்த்துப் போராடுபவளாக இருப்பாள் என பதிலளித்துள்ளனர். இந்த குழந்தை தற்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement