2 வயசுலேயே என் மகளுக்கு இப்படியொரு நிலைமையா! கதறிய பெற்றோர்! சோகத்திலும் எடுத்த நெகிழவைக்கும் முடிவு!

2 வயசுலேயே என் மகளுக்கு இப்படியொரு நிலைமையா! கதறிய பெற்றோர்! சோகத்திலும் எடுத்த நெகிழவைக்கும் முடிவு!


parents-donates-eyes-of-2-year-daughter

ராஞ்சி ஜார்க்கண்ட் அருகே கும்லா டவுன்  பகுதியை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். அவரது மனைவி சுலேகா. இவர்களுக்கு 2 வயதில் வன்ஷிகா என்ற குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பால்கனி வழியாக தவறி கீழே விழுந்துள்ளது. அதில் குழந்தைக்கு  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பதறிப்போன பெற்றோர்கள் கதறியபடி குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில்,  அவர்கள் குழந்தையை  மேல்சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் உள்ளது. மேலும் இந்நிலையில் சந்திர பிரகாஷ் மற்றும் சுலேகா தம்பதியினர் உயிரிழந்த தங்களது குழந்தையின் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

2 year child

இது குறித்து அவர்கள் கூறுகையில், எனது மகள் இறந்து விட்டாலும் இந்த உலகத்தை பார்ப்பாள். நாங்கள் எங்களது கண்களைதான் தானம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்குள் இரண்டு வயதுக்கு முன்னதாகவே எங்களது மகளின் கண்களை தானம் செய்யும் நிலைமை வரும் என எதிர்பார்க்கவில்லை என்று கதறி அழுதுள்ளனர். ஆனால் இதன் மூலம் இரண்டு குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும் என தெரிவித்து ஆறுதல் அடைகின்றனர்.