திடீரென இடிந்து விழுந்த பாலம்! பயணித்த பயணிகளுக்கு நிகழ்ந்த சோகம் - வீடியோ உள்ளே.

திடீரென இடிந்து விழுந்த பாலம்! பயணித்த பயணிகளுக்கு நிகழ்ந்த சோகம் - வீடியோ உள்ளே.


Palam kujarath

குஜராத் மாநிலம் ஜீனாகத் அருகே உள்ள மலனாகா கிராமத்தில் ஆற்றை கடக்க பாலம் ஒன்று உள்ளது. அவ்வழியாக எப்போதும் அதிக படியான கார்கள், வண்டி என சென்று கொண்டிருக்கும்.இதனால் பாலம் எப்போதும் பிசியாக காணப்படும்

இந்நிலையில் நேற்று திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கார்கள் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிக் கொண்டன.


இதனால் காரில் பயணித்த பயணிகளும் படுகாயமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராமத்தினர் இடிபாடுகளில் சிக்கிய மக்களை காப்பாற்றி மீட்டனர். இதனால் ஜீனாகத்திலிருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் அதற்கு காரணம் கடுமையாக பெய்த மழை தான் என கூறப்படுகிறது.