இந்தியா

இந்திய விமான விபத்து குறித்து டிவிட்டரில் உருகிய பாகிஸ்தான் பிரதமர்..! என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா.?

Summary:

Pakistani PM twit about Air India Express plane crash

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்திற்கு வருத்தம் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்ததில் விமானிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்துவருகிறது. இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விமான விபத்து குறித்து இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், மற்றும் பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுல பதிவில், "கேரள மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது, அப்பாவி உயிர்களை இழக்க வழிவகுத்தது. ஒன்றும் அறியாத தங்கள் உறவுகளை இழந்து பெரும் துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் அல்லாஹ் பலம் தருவார்". என பதிவிட்டுள்ளார்.


Advertisement