இந்தியா சினிமா

#GoBackModi: பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகை ஓவியா.

Summary:

பிரதமர் மோடி நாளை சென்னை வருகைதரும் நிலையில், மோடியின் வருகைக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு தெர

பிரதமர் மோடி நாளை சென்னை வருகைதரும் நிலையில், மோடியின் வருகைக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக நாளை சென்னை வருகிறார். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளை சென்னை வரும் பிரதமர் மோடி அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் நாளை பகல் 1.35 மணிக்கு கொச்சி செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்ப்போர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.  அந்தவகையில் நடிகை மற்றும் பிரபல பிக்பாஸ் போட்டியாளரான நடிகை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் #GoBackModi  ட்வீட் செய்திருக்கிறார்.


Advertisement