இந்தியா Covid-19

அதிகரித்துவரும் கொரோனா.! எல்லைகளை மீண்டும் மூடும் கர்நாடக அரசு..!

Summary:

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

தற்போது கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கர்நாடக எல்லைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

72 மணிநேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநில எல்லையில் அனுமதிக்கப்படுவர். இன்று காலை முதல் மாநிலத்தின் எல்லைகள் மூடப்பட்டு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


Advertisement