BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அம்மாடியோவ்... 38 லட்சம் ரூபாய் அபேஸ்.! புதுவை பொறியாளரிடம் டெலிகிராம் கும்பல் மோசடி.!
புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளரிடம் telegram கும்பல் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர் சையது சலாம் இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் இந்தியா வந்திருந்தபோது டெலிகிராம் மோசடி கும்பல் இவரை தொடர்பு கொண்ட சிலர் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 30 சதவீதம் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பியவர் ஆயிரம் ரூபாய் முதலில் முதலீடு செய்து இருக்கிறார். அவர்கள் சில யூடியூப் சேனல்களை இவருக்கு அனுப்பி சப்ஸ்கிரைப் செய்ய சொல்லி இருக்கின்றனர். அதன்படி இவர் செய்ததும் ஆயிரம் ரூபாயுடன் 300 ரூபாய் சேர்த்து 1300 ரூபாய் வருது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனை உண்மை என்று நம்பிய சையது சலாமிடம் நீங்கள் பிரிமியர் கஸ்டமர் ஆகி விட்டீர்கள் இனி பணம் உங்களுக்கு நேரடியாக வராது உங்களுடைய கம்ப்யூட்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கூறி இருக்கின்றனர். இதனை உண்மை என்று நம்பி அவ்வாறு 38 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து இருக்கிறார். இணையதளம் மோசடி பேர்வழிகள் சொன்ன அனைத்து வங்கி கணக்குகளிலும் பணத்தை முதலீடு செய்துள்ளார். மேலும் அவர்கள் கூறிய MBBZ.CC என்ற வங்கி கணக்கிலும் பணத்தை செலுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது பணத்தை எடுக்கும் என்றபோது உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காட்டியது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார் சையது சலாம் . இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் . இந்தப் புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் கீர்த்தி விசாரணை செய்து வருகிறார்.