பேரணியில் முதலமைச்சர் மீது வெங்காய வீச்சு.! வைரல் வீடியோ.!

பேரணியில் முதலமைச்சர் மீது வெங்காய வீச்சு.! வைரல் வீடியோ.!


Onion through on the Chief Minister Nithish kumar

பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் வெங்காயத்தை வீசியுள்ளார். ஆனால், அவர் மீது படவில்லை. இதைப் பார்த்த நிதிஷ் குமார் தனது பேச்சை நிறுத்தாமல் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் தொடர்ந்து வீசினாலும் பேசுவதை நிறுத்தமாட்டேன் என்று தெரிவித்தார்.

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆன்லைனிலும் வெளிவந்துள்ளது. இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.