இந்தியா Covid-19

வேகமெடுக்கும் ஒமைக்ரான்... கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி.!

Summary:

வேகமெடுக்கும் ஒமைக்ரான்... கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி.!

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனாவால் அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 65க்கும் மேலாக உயர்ந்தது. 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் ஒமைக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது.  கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனால் கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவை கட்டுப்படுத்து மத்திய மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.


Advertisement