BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் 75 வயது கணவர்.!
குஜராத் மாநிலத்தில் 70 வயதில் பெண் ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார். உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், தற்போது அந்த பெண்மணியும் இணைந்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார். மோடா கிராமத்தை சேர்ந்த தம்பதி ரபரி(70) - மல்தாரி(75).
இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.