ஆறு ரூபாய் லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்.! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன முதியவர்..!

ஆறு ரூபாய் லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்.! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன முதியவர்..!


old man win lottery price

லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபீர் பிரமாணிக் என்பவருக்கு அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அவர் இதுவரை லாட்டரி மூலம் ஒரு ரூபாய் கூட சம்பாதித்தது கிடையாது என கூறப்படுகிறது.

ஆனாலும் அவர் லாட்டரி டிக்கெட்டை வாங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்துவந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு தற்போது ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சமீபத்தில் இவர் வாங்கிய 6 ருபாய் லாட்டரி மூலம் சுமார் 1 கோடி ரூபாய் பரிசு தொகையை வென்றுள்ளார். இதைப்பற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் துளி கூட நம்பவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இவர் லாட்டரி மூலம் வென்ற தொகையை வைத்து தனக்கு இருக்கும் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும். மீதம் இருக்கும் தொகையில் வீடு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.