11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 84 வயது முதியவர்! வெளியான அதிர்ச்சி தகவல்.!old-man-taken-11-times-corona-vaccine

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு மேலாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இவர் 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது தடுப்பூசியால் அதிகம் பயனடைந்ததாக சாதாரணமாக தெரிவித்து உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.