செல்போன் திருடியவரை கட்டிவைத்து அச்சுறுத்திய ஓட்டுநர்கள்... செருப்பு மாலை அணிவித்து,.. 3கி.மீ லாரி ஓட்டிய வைரல் காட்சிகள்..!odisha-men-tied-into-truck-with-slippers-for-thieft-cel

செல்போன் திருடிய நபரை லாரியின் முன்பக்கமாக கட்டி வைத்து ஓட்டுநர்கள் அச்சுறுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டம் மார்ஷாகாய் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரா ஸ்வைன். இவர் பகுதிநேர லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், மற்ற லாரி ஓட்டுனர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த லாரி ஓட்டுனர் ஒருவர் தனது அலைபேசியை காணவில்லை என்ற கத்தியுள்ளார். சந்தேகமடைந்த சக லாரிஓட்டுனர்கள் கஜேந்திராவை பிடித்து விசாரித்துள்ளனர்.

odisa

அப்போது திருடியது தெரியவந்ததால் அவரது இரு கைகளையும் லாரியின் முன்பக்கம் கட்டி வைத்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். பின் லாரியை வேகமாக 15 முதல் 20 நிமிடங்கள் இயக்கி அவரை பயங்கரமாக அச்சுறுத்தியுள்ளனர். இதனை செல்போன் மூலம் படம்பிடித்த சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட, தற்போது அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.