மீண்டும் அதிர்ச்சி... நர்சிங் மாணவி கௌரவக் கொலை.!! தந்தை கைது.!!



nursing-student-honor-killing-father-arrested

கர்நாடக மாநிலத்தில் மகள் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் அந்தப் பெண்ணை கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் மேலகுந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. நர்சிங் மாணவியான கவிதா தனது பகுதியில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரை காதலித்து வந்திருக்கிறார். அந்த நபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் வீட்டின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் கவிதா தனது காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். மேலும் காதலித்த நபரையே திருமணம் செய்வேன் எனவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

India

இந்நிலையில் தனது மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்தால் தனது குடும்ப கவுரவம் கெட்டுவிடும் என கருதிய அவரது தந்தை தனது மகளை கௌரவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு தனது மகளின் கழுத்தை நெறித்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து மகளின் உடலை வீட்டின் அருகே எரித்துள்ளார். இதன் பிறகு அனைத்து தடையங்களையும் மறைத்துவிட்டு தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்து நாடகமாடியிருக்கிறார்.

இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!

அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறை தீவிரமாக விசாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது மகளை கௌரவக் கொலை செய்ததை காவல்துறையிடம் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரது வீட்டருகே எரிந்த நிலையில் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இதையும் படிங்க: கௌரவ கொலை... 20 வயது பெண்ணுக்கு கோடாரி வெட்டு.!! தந்தை, உறவினர்கள் கைது.!!