கால்நடை மருத்துவ பெண்ணை கொன்ற கொலையாளிகளுக்கு சிறையில் வழங்கப்பட்ட மட்டன் உணவு! அதிர்ச்சியில் மக்கள்!
கால்நடை மருத்துவர் பெண்ணை கொலை செய்த நான்கு கொடூரன்களுக்கு சிறையில் மட்டன் கறிதரப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் கால்நடை மருத்துவரை கடந்த வாரம் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு 4 பேருக்கும், முதல் நாள் மதியம் பருப்பு சாதம் தரப்பட்டுள்ளது என கூறப்பட்டது . இந்த தகவல் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை மருத்துவர் பெண்ணை மிருகத்தனமாக கொலை செய்த கயவர்களை தூக்கில் போட வேண்டும் என பொதுமக்கள் கூறிவந்தநிலையில் அவர்களுக்கு அசைவ உணவு கொடுத்த தகவல் வெளியாகி வருவதால் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.