முதியவரை காக்கவைத்த ஊழியர்களுக்கு தண்டனை; கவனத்தை பெற்ற முதலாளியின் செயல்.!



Noida CEO Order to Employees 30 minutes Standing work for Punishment 

 

மணிக்கணக்கில் முதியவர் ஒருவரை காத்திருக்க வைத்த ஊழியர்களுக்கு, முதலாளி ஒருவர் தக்க பாடம் புகட்டிய சம்பவம் நடந்துள்ளது. 

காத்திருந்த முதியவர்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் வசித்து வரும் முதியவர், நொய்டா குடியிருப்பு ஆணைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு தேவையான ஆவணங்களை பணியாளர்கள் கேட்டு வழங்கவில்லை. முதியவரை நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "விளையாட்டு வினையானது" - 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்; நெஞ்சை ரணமாக்கும் சோகம்.! 

இருக்கையில் வசதியான வேலை

ஊழியர் இருக்கையில் வசதியாக அமர்ந்து இருந்தார். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு இந்த விஷயம் கவனத்தை பெற்ற நிலையில், ஊழியர்களுக்கு 30 நிமிடம் நின்று கொண்டு வேலை பார்க்குமாறு தண்டனை கொடுத்தார்.  

ஆப்படித்த சிஇஓ-க்கு பாராட்டுக்கள்

இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், முதலாளியின் செயலுக்கும் பாராட்டுகளை குவித்து வருகிறது. மூத்த குடிமகன் என்றும் மதிக்காமல் ஊழியர்கள் அவ்வாறு செயல்பட்டதால், அவர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: காதலியை கால் கேர்ள் ஆக்கி வருமானம் பார்த்த இளைஞர்; டேட்டிங் ஆப்-பில் கஸ்டமர்ஸ்.. பகீர் தகவல்.!