அரசியல் இந்தியா

மோடியின் திடீர் முடிவால்! நோ சார்.. போகாதீங்க என கெஞ்சும் நெட்டிசன்கள்!

Summary:

no sir word treanding for modi

பிரதமர் மோடியை சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி தேசிய அளவில் “நோ சார்” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அடுத்தப்படியாக சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்வோரை கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. ட்விட்டரில் மட்டும் பிரதமர் மோடியை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இந்தநிலையில் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப்  போன்றவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மோடியின் இந்த அறிவிப்பு அவரை டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சமூக‌வலைத்‌தளங்‌களில் ‌இருந்து‌ பிரதமர் மோடியை வெளியே‌‌ற வேண்டாம் என்பதை ‌வலியுறுத்தும் ‌வகையில்‌ ‘நோ சார்‌‌‌‌’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்‌‌‌ளது.


Advertisement