இந்தியா

நித்தியானந்தாவின் 19 வயது பெண் சிஷ்யை கடத்தப்பட்டாரா? அவரே வெளியிட்ட வீடியோ!

Summary:

nithyantha female sissy video

 
நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நான் கடத்தப்படவில்லை என பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்தா கடத்தப்பட்டு தனிமையான இடத்தில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக முன் செய்தி பரவியது. இந்தநிலையில் இது குறித்து விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோ பதிவில், நான் கடத்தப்படவில்லை என்பதையும் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு 19  வயது நிரம்பிவிட்டது. என் விருப்பப்படி நான் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன் என கூறினார்.

மேலும், தன்னுடைய பெற்றோரே தான் என்னை கடத்தப்பட்டதாக வதந்தியை பரப்பி எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னை சித்திரவதை செய்ய, எந்த எல்லைக்கும் போவார்கள் என தெரிவித்தார். சாமியார் நித்தியானந்தா மற்றும் அவரின் ஆசிரமத்தால் தனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement