ஒரே ஜல்சாதான்.. பிரபல நடிகையுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா!nithyananda escaped with ranjitha to island

கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கு பக்தை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த 2010ல் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆகியுள்ளது.

nithyananda

எனவே விசாரணை முடியும் வரை நித்யானந்தா பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நித்யானந்தா கடந்த சில மாதங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .

மேலும் இதனால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக செய்தி வெளியானது.

 இந்நிலையில் நித்யானந்தா தற்போது பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.