ரூ.1 இலட்சம் ரொக்கம், விருது பரிசு... நித்தியானந்தாவின் ஜாக்பாட் அறிவிப்பு.. கண்டிஷன் இதுதான்..!

ரூ.1 இலட்சம் ரொக்கம், விருது பரிசு... நித்தியானந்தாவின் ஜாக்பாட் அறிவிப்பு.. கண்டிஷன் இதுதான்..!



nithyananda-announce-rs-1-lakh-reward-condition-tamil

திரைமறைவில் இணையவழி வாழ்க்கை நடத்தும் இல்லாத நாட்டின் அதிபர் நித்தியானந்தா, தான் சொல்வதை செய்யும் பக்தருக்கு அவர் நாட்டு பணத்தில் ரூ.1 இலட்சம் ரொக்கம் வழங்கப்படும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.

பிரபல கேடி சாமியார் நித்தியானந்தா, 3 மாத திடீர் தலைமறைவை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி சமூக வலைத்தளம் வழியே பக்தர்களிடையே தோன்றினார். நேற்று இரவில் மீண்டும் சத்சங்க உரை என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் அவர் பல சுவாரசிய தருணங்கள் குறித்த தகவலை பகிர்ந்துகொண்டார். 

அந்த தகவலில், "மகா கைலாஸாவில் இருந்து பரமசிவன் நமக்கு உரையாற்றுகிறார். அனைவரும் சமாதி பழக வேண்டும். சமாதி பழகும் முறை குறித்து பல சத்சங்கங்கள் இணையப்பக்கத்திலும் உள்ளன. நமது விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். 1 கோடி மக்களுக்கு சமாதி பயிற்றுவிக்க வேண்டும். இந்துவிரோத தீய சக்தி என்னை தாக்கியபோது நான் கைலாஸாவை உருவாக்கவில்லை.

அப்போது, அதுகுறித்த கனவில் இருந்தேன். லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்த எனக்கு, கைநீட்டினால் சோறு - கால் நீட்டினால் தூக்கம் என இருந்தது. சாமியாராக இருந்த நான் பரமசிவனின் பேரருளால் கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று எனக்கென ஏர்லைன்ஸ் உள்ளது. அவ்வுளவு தூரம் உயர்ந்துள்ளேன். 

nithyananda

மனிதன் பழிதீர்க்கும் மனோசக்தியை வளர்க்க வேண்டும். புகழ்கிறவன் திருடனாக இருப்பான். பழிக்கிறவனை அருகில் வைத்து வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள். இது எனது குருமார்கள் கொடுத்த அறிவுரை, வரம். பத்தமடை பாய், 6 மண்டி சாக்கு பை, நாச்சியார் கோவில் விளக்கு, ஸ்ரீரங்கம் உலக்கை உட்பட 10 பொருட்களை அன்றாடம் பயன்படுத்தி வருகிறேன். 

உலகம் முழுவதிலும் ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் 1000 பேருக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கப்பரிசு கைலாஸா சார்பில் வழங்கப்படும். இதற்கு சீடர்கள் மூலமாக தனிப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அந்நாட்டின் பண மதிப்பில் ரூ.1 இலட்சம் ரொக்கம், அன்னலட்சுமி விருது வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.