இந்தியா

என்னை பார்த்து ஏன் வயிறு எரிகிறது? முடிந்தால் நீங்களும் ஜாலியாக இருங்க! நித்தியானந்தா அதிரடி பேச்சு

Summary:

Nithiyanantha open talk

இன்று போலீசாரால் தேடப்பட்டு வருபவர் சுவாமி நித்யானந்தா. அதற்கு காரணம் அவர் மீது பாலியல் புகார் மற்றும் குழந்தையை கடத்தி சித்ரவதை செய்தல் போன்ற பல வழக்குகள் அவர் மீது எழுந்துள்ளதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

ஆனால் நித்யானந்தா ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசம் என பெயர் வைத்து, அதனை தனிநாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியது. மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் அனைவரும் கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் எனவும் நித்யானந்தா அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி நித்தியானந்தா அவர்கள் பேசும் வீடியோக்களை அவரது சிஷ்டிகள் அவ்வப்போது யூடியூபில் பதிவேற்றம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது கூட பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தான் ஒரு புறம்போக்கு என்று கூறிய நித்தியானந்தா தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் சவால் விடும் அளவுக்கு மிகவும் ஆக்ரோசமாக பேசியுள்ளார். என்ன தான் நான் தொலைவில் இருந்தாலும் எனது ஆசிரமங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார் 

மேலும் தான் மானஅவமானத்திற்கு கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நான் ஜாலியா இருப்பதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், முடிந்தால் நீங்களும் ஜாலியா இருங்கள் என்று அதிரடியாக பேசி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


Advertisement