இந்தியா

வரதட்சணையில் மணமகன் போட்ட கண்டிஷன்! பெண் வீட்டாரின் தடாலடி முடிவு!

Summary:

newly married husband condition

மேற்கு வங்க மாநிலத்தில் பாரீக் என்கிற பள்ளி ஆசிரியருக்கும், பிரியா என்ற பெண்ணிற்கும் அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்தநிலையில், பள்ளி ஆசிரியராக இருக்கும் பாரீக் பெண் வீட்டாரிடம், தனக்கு வரதட்சணை வாங்குவதில் உடன்பாடு இல்லை என்பதால், உங்கள் பெண்ணை மட்டும் தந்தால் போதும் என கூறி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு வித்தியாசமான பரிசுகொடுக்க நினைத்த மணமகள் வீட்டார், ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய வித்தியாசமான பரிசை கொடுத்துள்ளனர். இந்தப் புத்தகங்களின் மதிப்பு ஒரு லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியாவின் பெற்றோர்கள் கூறுகையில், மணப்பெண்ணுக்கு புத்தகம் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக தான் புத்தகத்தை தேர்வு செய்து சீதனமாக கொடுத்ததாக கூறியுள்ளனர். 


Advertisement