வழிப்பறி கொள்ளை.! மனைவி கண்முன்னே துடிதுடிக்க புது மாப்பிளைக்கு நேர்ந்த பயங்கரம்.! பதறவைக்கும் சம்பவம்!!

வழிப்பறி கொள்ளை.! மனைவி கண்முன்னே துடிதுடிக்க புது மாப்பிளைக்கு நேர்ந்த பயங்கரம்.! பதறவைக்கும் சம்பவம்!!


New married young Man killed by theives front of wife

ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த நெக்குண்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது நிறைந்த தாமு. இவரது மனைவி அனுராதா. இவருக்கு 23 வயதாகிறது. இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் புதிதாக திருமணமான ஜோடிகள் அடிக்கடி வெளியே செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் தாமு பைக்கில் தனது மனைவி மற்றும் மாமியாரை வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் தூர்லப்பள்ளி அருகே கொத்தகுண்டவம் என்ற பகுதியில் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 3 பேர் வழியை மறித்துள்ளனர். பின் வண்டியை நிறுத்திய அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கேட்டுள்ளனர். அதற்கு தாமு தர முடியாது எனக் கூறி, சத்தம் போட்டுள்ளார்.

robbery

இதில் கோபமடைந்த ஒரு திருடன் திடீரென தாமுவை கத்தியால் குத்தியுள்ளான். இதனைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்த அனுராதாவும் அவரது அம்மாவும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

மேலும் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தாமு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தாமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.