பப்ஜிக்கு தடையா? கவலையே வேணாம்! வருகிறது புதிய பாஜி கேம்! நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்ட அறிவிப்பு!



new-game-launched-in-india-akshaykumar-announcement

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனால் தொடர் பதற்றம் ஏற்பட்டு இந்திய சீன உறவு நிலைகுலைந்த நிலையில், இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. மேலும் இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்புகளை மத்திய அரசு தடை செய்தது. 

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கூடுதலாக பப்ஜி  உள்ளிட்ட 118 ஆப்களை அரசு தடை செய்வதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பப்ஜி கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாக இருந்தனர்.  இதனால் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கேம் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் புதிய கேம் ஒன்று  உருவாக்கப்பட உள்ளது. இந்த கேமை ncore games என்ற இந்திய கேமின் நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

இதுகுறித்து நடிகர் அக்ஷய் குமார்  வெளியிட்டுள்ள பதிவில், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாக எனது முன்னிலையில் உருவாகும் கேம் fearless and united guards. இது  பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் சொல்லிக் கொடுக்கும். இந்த கேமின் வருமானத்திலிருந்து 20% இராணுவ வீரர்களின் நலனுக்காக  அமைக்கப்பட்டிருக்கும் பாரத் கீ வீர்  ட்ரஸ்டுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.