இந்தியா

வங்கக் கடலில் உருவாகும் குலாப் புயல்.! மணிக்கு 75 கி.மீ. வேகத்துடன் எங்கு கரையை கடக்கிறது தெரியுமா.?

Summary:

வங்கக் கடலில் உருவாகும் குலாப் புயல்.! மணிக்கு 75 கி.மீ. வேகத்துடன் எங்கு கரையை கடக்கிறது தெரியுமா.?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது.

இந்த புயலால் அதிகமான சேதாரங்கள் எதுவும் இருக்காது எனவும், கடலோர மாவட்டங்கள், தெலங்கானா, ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக உள் மாநிலங்களிலும் அதிகயளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப்பகுதிகளில் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement