இந்தியா

அச்சிடப்பட்ட புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு.!

Summary:

new curency note 2000 and 500 - reserv bank - infermation act

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அச்சிடப்பட்ட புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2016 நவம்பர் 9 ம் தேதி அன்று புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று உத்தரவிட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்தது. இந்நிலையில் இச்செயல் சரியானது என்றும் தவறானது என்றும் பல விமர்சனங்கள் அப்பொழுது எழுந்தது. ஆனால் உண்மையில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு 7.8 லட்சம் கோடியாக குறைந்தது.

Image result for reserve bank

அதன் பிறகு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிரிந்தர் திங்ரா என்பவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு 2016 நவம்பர் மாதத்தில் எத்தனை ரூபாய் நோட்டுகள் அவை எந்த தேதியில்  அச்சடிக்கப்பட்டன என்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் விண்ணப்பித்த நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்ற விதி முறைகளை மீறி மூன்று மாதம் கழித்து பதிலளித்த ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பு அதிகாரி, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் குலைக்கும் வாய்ப்பு உள்ளதால் விண்ணப்பித்தவர் கோரிய தகவலை அளிக்க முடியாது என மறுத்துள்ளார்.

Image result for information act department india

இதனை எதிர்த்து தகவல் ஆணையத்தின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தேதிகளில் (நவம்பர் 9, 2016 முதல் நவம்பர் 30, 2016 வரை) அச்சிடிப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மட்டும் தெரிவிப்பது எந்த வகையில் நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதிக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் கோரிய தகவலை அளிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Advertisement