புத்தாண்டு அன்றேவா..! சீனாவில் பரவ தொடங்கிய புதுவகை கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி தகவல்..

புத்தாண்டு அன்றேவா..! சீனாவில் பரவ தொடங்கிய புதுவகை கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி தகவல்..


New corona virus case confirmed in China

சீனாவில் கல்லூரி மாணவி ஒருவருக்கு புதுவகையான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் உஹான் நகரில் கதறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் படுவேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்று பெரிய நாடுகள் இந்த கொரோனா வைசரால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டு முடிவடைந்தநிலையிலும் இதுவரை இந்த வைரசுக்கு எதிரான அதிகாரபூர்வ தடுப்பு மருந்து கதறியப்படவில்லை. இதனிடையே மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இங்கிலாந்து நாட்டில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

corona

இதனால் உலகநாடுகள் அனைத்தும் மீண்டும் உஷார் படுத்தப்பட்டு, பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து சீனாவின் ஷன்ஹாய் நகருக்கு திரும்பிய 23 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு இந்த வைரஸ் புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.