இரவு நேரத்தில் செல்லில் பேசிக்கொண்டு மொட்டைமாட்டிக்கு சென்ற நேபாள பெண்! திருட வந்ததாக நினைத்து தாக்கிய கும்பல்! வெளியான அதிர்ச்சி வீடியோ...
நேபாள இளம் பெண் மீது உத்தரப்பிரதேச பரேலியில் நடக்கப்பட்ட கொடூரமான தாக்குதல் நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சம்பவ வீடியோ பரவி மக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
செல்போனில் பேசச் சென்ற சுஷ்மிதா
போஹாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மஹர் பரேலி மாவட்டம் பரடரி பகுதியில் வேலைக்காக வாடகைக்கு தங்கி வசித்து வந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு 1 மணியளவில், அவர் செல்போனில் பேச வீட்டின் மொட்டைமாடிக்கு சென்றார்.
திருடர் என சந்தேகித்து அச்சுறுத்தல்
அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவரை திருட வந்தவர் என சந்தேகித்து பிடிக்க முயன்றனர். அவர்கள் கத்தி காட்டி மிரட்டியதால் சுஷ்மிதா பயந்து மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாவம்ல.. என்னதா இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே! மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென... வைரல் வீடியோ!
கம்பத்தில் கட்டி அடித்த கொடூரம்
அந்த கும்பல் சுஷ்மிதாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து மரக் கட்டைகளால் அடித்து துன்புறுத்தினர். “நான் திருடவில்லை, வாடகைக்கு வசித்து வருகிறேன்” என அலறியபோதும் அவர்கள் தாக்குதல் தொடர்ந்தனர்.
காவல்துறை நடவடிக்கை மற்றும் கைது
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் அடிப்படையில் கௌரவ் சக்சேனா, சிவம் சக்சேனா, அமன் சக்சேனா, அருண் சைனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கொடூர தாக்குதல் வீடியோ நாடெங்கும் பரவி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Bareilly : नोएडा से बरेली दोस्तों से मिलने आई एक नेपाली लड़की को हैवानों ने जमकर पीटा. वे लड़की को चोर समझकर लाठी डंडों से पीटते रहे. लड़की बख्श देने और रहम की भीख मांगती रही. हाथ जोड़कर पुलिस को बुलाने की मिन्नतें करती रही. बाल पकड़कर उसे बुरी तरह पीटा गया। पुलिस ने चार को किया… pic.twitter.com/630ZWftaED
— Tanseem Haider तनसीम हैदर (@TanseemHaider) August 3, 2025
இதையும் படிங்க: விவசாயி ஒருவரை கொடூரமாக மிதித்து உயிரை காவு வாங்கிய காட்டு யானை! மேலும் வாலிபர்களை வெறிக்கொண்டு விரட்டிய யானை! நெஞ்சை பதைப்பதைக்கும் வீடியோ...