இந்தியா

தவறான கணிப்பு.. அப்பாவி பொதுமக்கள் 11 பேர் சுட்டுக்கொலை.. நாகலாந்தில் பதற்றம்..!

Summary:

தவறான கணிப்பு.. அப்பாவி பொதுமக்கள் 11 பேர் சுட்டுக்கொலை.. நாகலாந்தில் பதற்றம்..!

நாகலாந்து - மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள மோன் மாவட்டத்தில், ஒடுங் மற்றும் திரு என்ற கிராமத்தை சார்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு வேனில் திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என எண்ணி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கி சூட்டில் 11 அப்பாவி பொதுமக்கள் பலியாகவே, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். உள்ளூர் ஊடகத்தில் தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நாகலாந்து முதல்வர் நைபியூ ரியோ உத்தரவிட்டுள்ளார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், இராணுவமும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த துயர நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு அளவிலான உயர்மட்ட விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில், தடை செய்யப்பட்டுள்ள நாகலாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் NSCN K பிரிவினரின் ஆதிக்கம் அதிகம். இந்தியாவில் உள்ள நாகா இன மக்கள் வசிக்கும் பகுதியை இக்கவுன்சில் ஏற்படுத்திய நிலையில், இது ஆயுதம் ஏந்தி போராடி வரும் பிரிவு ஆகும். இப்பிரிவுக்கு எதிராகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Advertisement