டாக்டர் மற்றும் மனைவியின் புகைப்படங்களை ட்விட்டரில் ஆபாசமாக சித்தரித்த மர்ம நபர்... சைபர் கிரைம் விசாரணை.!mysterious-person-who-depicted-obscene-photos-of-doctor

புதுச்சேரியைச் சார்ந்த டாக்டர் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை  ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 புதுச்சேரி கோளாஸ் நகரை சேர்ந்தவர் டாக்டர் வெங்கட்ரமன்யா(36),இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  முதுகலை படித்து வருகிறார். இவருக்கு  ட்விட்டர் சமூக வலைதளம் மூலமாக ஒரு நபர்  அறிமுகமாகி இருக்கிறார். அந்த நபர் டாக்டரிடம் அவரது முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்களை கேட்டிருக்கிறார்.

pudhucheyதனது தனிப்பட்ட விபரங்களை பற்றிய தகவல்களை டாக்டர் தர மறுத்ததால் டாக்டர் மற்றும் அவரது மனைவி இருக்கும் புகைப்படங்களை  ஆபாசமாக சித்தரித்து  அவருக்கு அனுப்பி இருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி  உள்ளார்.

pudhucheyஇதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் வெங்கட்ரமன்யா இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் செய்தார். இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.