BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பசிபிக் கடலுக்குள் இருந்த கருப்பு நிற மர்ம முட்டைகள்! அதில் உள்ளே இருந்தது என்ன? ஆய்வில் வெளிவந்த தகவல்...
நாம் வாழும் உலகம் என்பது நாம் நினைப்பதை விடவும் மர்மங்களால் நிரம்பியதும், அதிசயங்களை கொண்டதுமாக உள்ளது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் இந்த உலகை புதிய கோணத்தில் பார்க்க வைக்கும்.
சமீபத்தில், ஜப்பானில் உள்ள டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், கருப்பு நிற மர்ம முட்டைகள் போன்றவை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவை 'அபிசோபெலஜிக் மண்டலம்' எனப்படும் கடலின் ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

முட்டைகள் ஆய்விற்காக மேலே கொண்டுவரப்பட்ட போது, பெரும்பாலானவை சேதமடைந்தன. ஆனால் மீட்கப்பட்ட 4 முட்டைகளில் உள்ளதை கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். முதலில் இது கடல் உயிரினங்களின் முட்டைகள் என கருதப்பட்டது. ஆனால் பின்னர் இது தட்டையான புழுக்களின் கூடு என்பது உறுதி செய்யப்பட்டது.
விசித்திரமான வெள்ளை திரவம் மற்றும் புழுக்கள்
முட்டையை வெட்டிய போது, பால் போன்ற வெள்ளை திரவம் வெளியேறியது. உள்ளே அடர்த்தியான வெள்ளை உடல்கள் இருந்தன. இதை Platyhelminthes வகை Flatworms என விஞ்ஞானிகள் உறுதிபடுத்தினர்.
இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியம்?
இது, கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தட்டையான புழுக்கள் என்பதாலே முக்கியம். இதுவரை 5,200 மீட்டர்தான் பதிவாகியிருந்தது. இந்த புதிய தகவல், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் மிக ஆழம் வரை வாழும் திறனை எடுத்துக்காட்டுகிறது.

பாதுகாப்பான தளத்தில் வாழும் மற்ற புழுக்களுடன் ஒத்த பண்புகள் இருந்தாலும், இவை ஒரு தனி மரபைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.