உடல்நலம் பாதித்த தந்தை..! 2100 கிலோமீட்டர் மும்பையில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் புறப்பட்ட மகன்.!

உடல்நலம் பாதித்த தந்தை..! 2100 கிலோமீட்டர் மும்பையில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் புறப்பட்ட மகன்.!



mumbai-watchman-is-cycling-2100-km-to-be-with-his-ailin

இந்தியாவில் நாடு முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலார்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துவருகிறது. இந்நிலையில், நபர் ஒருவர் மும்பையில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

 மும்பையில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர் முகமது ஆஃரிப் (36). இவரது தந்தை ஜம்மு காஷ்மீரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். தந்தையை எப்படியும் பார்க்கவேண்டும் என முடிவு செய்த ஆஃரிப் ஊரடங்கு காரணமாக பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டதால் என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.

உடனே, தன்னிடம் இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு மும்பையில் இருந்து காஷ்மீருக்கு அதாவது சுமார் 2,100 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடக்க முடிவு செய்து, அதன்படி இரவு முழுவதும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையை அடைந்துள்ளார்.

சைக்கிளில் பயணம் செய்யும் ஆஃரிப் இன் நிலமையை தெரிந்துகொண்ட குஜராத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அவருக்கு உணவு கொடுத்து, அவர் காஷ்மீர் செல்ல வாகனமும் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். இதனிடையே ஆஃரிப் இன் தந்தை உடல் நல குறைவால் அவதிப்படுவதை மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரியப்படுத்த, அவர்கள்  ஆஃரிப் இன் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வரும் வழியில் உணவு கூட இல்லாமல், தண்ணீர் மட்டும் பிஸ்கெட்டை சாப்பிட்டுக்கொண்டே சைக்கிள் ஓட்டிவந்ததாக தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்  ஆஃரிப்.