இந்தியா விளையாட்டு

மகளுக்காக தோனி செய்த செயல், வைரலாகும் வீடியோ!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Summary:

MS Dhoni and his daughter video


மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார். தோனிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தன் மகள் ஷிவாவுடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆகி வந்தது. இந்தநிலையில் அவரது மனைவி சாக்‌ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

மேலும் தோனி, தனது மகளுடன் தமிழில் பேசிக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அதுவும் அதிகப்படியாக வைரலானது. 

இந்நிலையில் தோனி சமீபத்தில் தனது மகள் ஸிவாவுக்கு தலை முடியை காயவைக்கும் வீடியோ ஒன்றை  இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement