பாம்பின் வாயில் சிக்கிய எலி குட்டி..! குட்டியின் உயிரை காப்பாற்ற பாம்பினை ஓட ஓட விரட்டிய தாய் எலி.! வைரல் வீடியோ..!Mother rat saves its cub from snake video goes viral

தனது குட்டியை காப்பாற்ற கொடிய பாம்பினை ஓட  ஓட விரட்டிய தாய் எலியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், பாம்பு ஒன்று குட்டி எலியை கவ்விக்கொண்டு சாலையில் ஊர்ந்து செல்கிறது. இதனை பார்த்த தாய் எலி தனது குட்டியை காப்பாற்ற அந்த பாம்பினை பின்தொடர்ந்து செல்கிறது.

பாம்பின் பின்னாலே செல்லும் அந்த தாய் எலி பாம்பினை தாக்க தொடங்குகிறது. ஒருகட்டத்தில் தப்பித்தால் போதும் என்ற நோக்கத்தில் குட்டி எலியை அங்கையே போட்டுவிட்டு பாம்பு அங்கிருந்து தப்பித்துச் செல்கிறது. இருந்தும் அந்த பாம்பை விடாமல் துரத்திச்சென்று எலி விரட்டி அடிக்கிறது.

இதனிடையே அந்த குட்டி எலி எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் உயிருடன் மீண்டு வருகிறது. தனது குட்டியை காப்பாற்ற பாம்புடன் போராடிய அந்த தாய் எலியின் பாசம் இணையத்தில் வைரலாகிவருகிறது.