3 வயது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய்! எல்லாம் அதுக்காகதானா! வெளிவந்த பகீர் காரணம்!!

3 வயது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய்! எல்லாம் அதுக்காகதானா! வெளிவந்த பகீர் காரணம்!!


mother-killed-3-year-child-for-illegal-affairs

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேயுள்ள தம்மம்பதி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு 3 வயதில் நிவண்யாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தையுடன் வீட்டில் இருந்த சரோஜினி தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனவும், திடீரென  மயங்கி விழுந்து விட்டதாகவும்  உறவினர்களிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அதன் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தாய் சரோஜினி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.இந்நிலையில் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை உன்னிப்பாக கவனித்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது.

illegal affair

அதாவது சரோஜினிக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கணவன் வேலைக்கு சென்ற பிறகு அந்த வாலிபரை வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணிய சரோஜினி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்தே குழந்தை மயக்கமடைந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து போலீசார் சரோஜினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.