தீராத ஆசை! மகளின் திருமணத்தில் தாய்க்கு ஏற்பட்ட காதல்! கடைசியில் என்ன ஆனது தெரியுமா?
தீராத ஆசை! மகளின் திருமணத்தில் தாய்க்கு ஏற்பட்ட காதல்! கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

பஞ்சாப் மாநிலத்தில் குருஸ்தாபூர் என்னும் பகுதியை சேர்ந்த குடும்பத்தில் பெண் ஒருவர் தனது சக ஊழியரை காதலித்துள்ளார். அந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், அதே திருமணத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.
மணப்பெண்ணின் அம்மா மணமகனின் அண்ணன் மீது ஏற்பட்ட ஈர்ப்பில் அவருடன் நெருங்கி பழக்க ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல இருவரும் எல்லை மீறி சென்றதை அடுத்து தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது மருமகனின் அண்ணனை திருமணம் செய்துள்ளார் மாமியார்.
இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மக்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் தாய் அதே வீட்டில் திருமணம் செய்துகொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.