முகக்கவசம் அணிந்து வீர நடைபோட்ட குரங்கு! மனிதர்களையே மிஞ்சிய கலக்கலான வீடியோ இதோ!

முகக்கவசம் அணிந்து வீர நடைபோட்ட குரங்கு! மனிதர்களையே மிஞ்சிய கலக்கலான வீடியோ இதோ!


Monkey wear head scarf as facemask

ஒடிசாவில் இந்திய வனப் பணியாளராக இருப்பவர் சுசந்தா நந்தா. வன உயிர்கள் மீது மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்ட அவர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விதவிதமான  விலங்குகள் குறித்தும், அவை செய்யும் வித்தியாசமான சேட்டைகள் குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

இந்தநிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவிவரும் நிலையில், மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகள் கழுவவேண்டும், மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது குரங்கு ஒன்று முகக்கவசம் அணிகிறது என குறிப்பிட்டு,  வீடியோ ஒன்றை சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குரங்கு ஒன்று கீழே இருந்த துண்டை எடுத்து முககவசம் போன்று தனது முகத்தை சுற்றி போட்டுக்கொண்டு மனிதர்களை போலாம்  சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றி வருகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.