ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
4 கிமீ நடந்தே சென்ற மோடி ,எதற்காக தெரியுமா? அசர வைக்கும் காரணம்..!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.
சிறுநீரக தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் நலிவடைந்து கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி வாஜ்பாய் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி நேற்று மாலை வாஜ்பாய் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் .
பின்னர் அவரது உடல் நேற்று மாலை கிருஷ்ணமேனன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து வாஜ்பாய் உடல் இன்று காலை 11 மணி அளவில் பாஜக தலைமையகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அஞ்சலி செலுத்துவது முடிந்தபின், இறுதி ஊர்வலத்திற்கான பணிகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு 1.15 மணிக்கு மேல் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் வாஜ்பாய் உடல் செல்லும் வாகனத்தின் அருகே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தொண்டர்களோடு நடந்தே சென்றனர்.
பாஜக அலுவலகம் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலம் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 4 கிலோமீட்டர் ஆகும் இருப்பினும் வாஜ்பாய் மீதிருந்த அளவற்ற அன்பால்,மரியாதையால் காரை தவிர்த்துவிட்டு மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தொடர்களோடு நடந்தே சென்றது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.