இன்று ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. பிரதமர் மோடி அஞ்சலி! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

இன்று ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. பிரதமர் மோடி அஞ்சலி! என்ன கூறியுள்ளார் தெரியுமா?


modi tribute to Rajiv gandhi birthday

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்டுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை 'சத்பவன திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமராக இருந்த தனது தாய் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் காங்கிரஸ் கட்சியினரால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜிவ் காந்தி அடுத்த பிரதமர் ஆனார். இதன்மூலம் நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.  1992ல் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி பலியானார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி ஜி பிறந்தநாளில், அவரருக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.