அரசியல் இந்தியா

கார்கில் நாயகனுக்கு இன்று 2ஆம் ஆண்டு நினைவு தினம்! பிரதமர் மோடி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

modi talk about vajpayee

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனது 93 வயதில் காலமானார். இந்தியாவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு வித்திட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி வாஜ்பாயின் நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

வாஜ்பாய் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வாஜ்பாய் ஆற்றிய சேவையை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
 


Advertisement