இந்தியாவில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே தேர்தல்.! பிரதமர் மோடி அதிரடி.!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே தேர்தல்.! பிரதமர் மோடி அதிரடி.!


Modi talk about one nation one election

குஜராத் மாநிலத்தின் கெவாடியாவில் நடைபெற்ற 80-வது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி.  அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்படுத்த வேண்டும். ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல இப்போதைக்கான தேவை இதுவே. தனித்தனி பட்டியல் வளங்களை வீணடிக்கும் செயல்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இந்த தேர்தல் முறை நடைமுறைக்கு வந்தால் அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு தடையின்றி கிடைக்கச் செய்ய முடியும் என தெரிவித்தார்.

modi

பிஹார் சட்டமன்ற தேர்தல் தான் இந்த வருடத்தின் கடைசி தேர்தல். 2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், மேற்குவங்க தேர்தல் என இரண்டு முக்கியத் தேர்தல்கள் வருகின்றன. இந்த இரண்டு தேர்தலுமே பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், பிரதமர் தனது ஒரே தேசம் ஒரே தேர்தல் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.