அரசியல் இந்தியா

மோடிக்கு அதுக்கு மட்டுமே நேரம் சரியா இருக்கு! ராகுல்காந்தி அதிரடி ட்விட்!

Summary:

Modi doesnt have time for meghalaya mine rescue rahul twit

கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.

இந்நிலையில் சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட ஊழியர்களை காப்பாற்ற மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட் செய்துள்ளார்.

18 நாட்களுக்கு முன்பு சிக்கிய ஊழியர்களை மீட்கமுடியாமல் மீட்பு பணியினர் தடுமாறி வருகின்றனர். மேலும் சுரங்கத்தின் உள்ளே இருக்கும் நீரை வெளியே எடுப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது உள்ள மோட்டார் மற்றும் பம்புகளை வைத்து நீரை வெளியே எடுப்பது சிரமமாக இருப்பதால் புதிய திறன் கொண்ட பம்ப் வந்த பின்பே மீட்பு பணி நடக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி கூறியுள்ள ட்விட்டில் 18 நாட்கள் ஆகியும் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்ட ஊழியர்களை காப்பாற்ற முடியவில்லை ஆனால் போகிபீல் பாலத்தில் நின்று பிரதமர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார் என்று விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. 


Advertisement